நடிகை த்ரிஷா என்றாலே பல கதாபாத்திரங்களில் நம் கண் முன்னே வந்து போகும் ஒரு திறமையான நடிகர் என்றே கூறலாம். இன்னும் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்ல, தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளத்திலும், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் த்ரிஷா மட்டும் தான் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் இதுவரை நடிகர்கள் கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கில் ஸ்டார் நடிகர்களான மகேஷ்பாபு, பவன் கல்யாண், ஜூனியர் என் டி ஆர், வெங்கடேஷ் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். இன்னமும் ஹீரோக்கள் வந்தாலும் சேர்ந்து ஹீரொயினாக நடிப்பதற்கு ரெடிதான்.
Discussion about this post