பொதுவாகவே பயணங்களின் போது ஜன்னலோர இருக்கை என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு தேர்வு தான். நம்ம ஊரில் எல்லாம் துண்டு போட்டு ஜன்னலோரம் சீட் பிடிப்பது என்பது மிக பிரபலமான டெக்னிக். ஆனால் விமானத்தில் எல்லாம் இந்த டெக்னிக் சரிவராது தானே. ஜப்பானிலும் விமானப்பயணத்தின் போது பயணி ஒருவர் தனக்கு ஜன்னலோர இருக்கை தான் வேணும் என , விமானப்பணிப் பெண்ணிடம் பிடிவாதமாக சண்டை பிடித்திருக்கிறார்.
பொறுமைக்கு இலக்கணமான அந்த பெண்ணும் நிலைமையை விளக்கி கூறி, ஜன்னலோர இருக்கை தரமுடியாத்தை தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அடம் பிடித்த அந்த நபரை ஒரு சின்ன டெக்னிக்கால் சமாதானம் செய்திருக்கிறார் அந்த பெண்.
ஒரு சின்ன பேப்பரில் ஜன்னல் மாதிரி படம் வரைந்து , அதனை அந்த பயணியின் இருக்கைக்கு அருகே ஒட்டி வைத்திருக்கிறார். இதை பார்த்ததும் அவ்வளவு நேரம் அடம் பிடித்த அந்த நபருக்கே தான் சிறுபிள்ளை தனமாக நடந்து கொண்டது புரிந்திருக்கிறது. உடனே சிரித்திருக்கி்றார் அந்த பயணி. மொத்தத்தில் பிரச்சனை முடிந்தது என்ற சந்தோஷத்தில் நிம்மதியாக அமைந்திருக்கிறது அந்த விமான பயணம்.
Discussion about this post