முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு மற்றும் 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து தினமும் 2 வேளைகள் குடித்து வந்தால் முதுகு வலி குறையும். வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி குறையும்.
வாதநாராயணன் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுத்து வந்தால் முதுகுவலி குறையும். 5 பல் பூண்டை தோல் நீக்கி 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து, 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி முதுகு வலியுள்ள இடத்தில் 10 நிமிடம் தேய்த்தால் முதுகு வலி குறையும்.
சிறிது உலர்ந்த இஞ்சி பொடியுடன் இரண்டு கருப்பு மிளகு, தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் முதுகு வலி குறையும். உட்கார்ந்து வேலை பார்பவர்களுக்கு ஏற்படும் முதுகுவலி, பைக்கு ஒட்டுபவர்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்கு பப்பாளி, முருங்கை, ஆரஞ்சு, மாதுளை, நெல்லி, பேரீட்சை, தேன், கேரட், ஆப்பிள், மா, பலா, தேங்காய், முருங்கை, இளநீர் இவைகளை சாப்பிட முதுகுவலி குறையும்.
Discussion about this post