கஜா புயலின் போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. கஜா புயல் தாக்கிய பகுதிகளில் அரசு மேற்கொள்ளும் மீட்புப்பணிகளுடன் தி.மு.க. தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் தமிழக அரசு, அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு என் பாராட்டுக்கள்
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது.
மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
தமிழக அரசின் பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு பணிகள் பாரட்டுக்குரியவை.
கமல் பாராட்டு
இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது. அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த செல்லூர் ராஜு
கஜா புயல் தொடர்பான தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியது வரவேற்கத்தக்கது. மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வாழ்த்தியுள்ளது ஆரோக்கியமான அரசியலை காட்டுகிறது. சிறந்த பணியை மேற்கொள்ளும் போது அதனை வாழ்த்துவது அரசிற்கு உற்சாகத்தை தரும். குறை உள்ளபோது அதனை சுட்டிக்காட்டுவதும், சிறந்த பணி மேற்கொள்ளும்போது வாழ்த்துவதும் உற்சாகத்தை தரும். இதே நிலை தொடர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Discussion about this post