நாகையில்இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்த கஜா புயல் தற்போது கொடைக்கானலை சூறையாடி வருகிறது. மரங்கள் ஆங்காங்கே சாலைகளில் விழுந்துள்ளதால் கொடைக்கானலில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
பழநி – கொடைக்கானல், வத்தலகுண்டு – கொடைக்கானல், தாண்டிக்குடி செல்லும் பாதை உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. ஏராளமான மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. இதனால், மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு சேவைகளும் சரிவர கிடைக்கவில்லை.
புயல் காரணமாக இன்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாண்டிக்குடியில் அதிக மழை பெய்தது. லேக்ரோடு, நாயுடுபுரம், செண்பகனூர் பகுதிகளில் கட்டட தகர மேற்கூரை பறந்தன. இன்றைய மழையும் காற்றும் கொடைக்கானலில் இது வரை இல்லாத தாக்கம் என உள்ளூர்வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post