கஜா புயல் தொடர்பான தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அரசியல் தலைவர்கள், “மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. புயலுக்கு 20பேர் வரை பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவது, பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைப்பது என மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.அவரிடம் புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் பணிகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார். கஜா புயல் சேதம் குறித்த விரிவான அறிக்கை விரைவில் உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த சூழ்நிலையில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன் இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.
அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
Discussion about this post