நடிகர் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் சினிமா துறையில் நடித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் நிறைய படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அக்ஷரா ஹாசன் அஜித்துடன் விவேகம் என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில்தான் நடித்தார்.
படங்கள் நடிக்கவில்லை என்றாலும் பரபரப்பாக அவரது சில அந்தரங்கப் புகைப்படங்களால் சமீபத்தில் பேசப்பட்டார். அவரது அந்தரங்க புகைப்படங்களை யாரோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர். இதனால் கோபமான அவர் புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
அவரின் புகாரின் பேரில் போலீசார் அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலன் தனுஜ் விர்வாணியை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர். ஆனால் அவரோ இதை நான் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
Discussion about this post