ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.O திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கிவரும் நிலையில் படக்குழுவினர் அதன் புரொமோஷன் பணிகளில் வேகம் காட்டிவருகின்றனர்.
2.O திரைப்படம் நான்கு வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருப்பதற்கான காரணம் அனிமேஷன் பணிகள் முடிவடையாததே என்று கூறப்பட்டது. பெரும்பாலான காட்சிகள் அனிமேஷனில் உருவாக்கப்பட்டாலும் இதில் நடித்துள்ள நடிகர், நடிகைகளுக்கும் சவாலான பயணமாகவே இந்த படம் அமைந்துள்ளது. அக்ஷய் குமார் ஏற்றுள்ள வில்லன் கதாபாத்திரம் உருவான விதம் குறித்து வெளியாகியுள்ள வீடியோ அதை உறுதிபடுத்தியுள்ளது.
ஹாலிவுட்டில் வரும் சூப்பர் ஹீரோக்களின் கதையைப் போல் உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர்களுக்கான ஒப்பனைகள், அனிமேஷன் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகளுக்கு ஹாலிவுட் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் அக்ஷய் குமாரின் இரண்டுவிதமான தோற்றங்களை கலைஞர்கள் எப்படி உருவாக்கினர் என்பதை பார்க்கலாம்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அக்ஷய் குமார், “2.O படத்தில் எனது தோற்றத்தை தொழில்நுட்ப அதிசயமாக மட்டும் வரையறுத்துவிடமுடியாது. அது எவ்வாறு வாழ்க்கைக்கு கொண்டுவரப்பட்டது என்பதைப் பாருங்கள்” என்று கூறியுள்ளார்.
My look in #2Point0 is nothing short of a technological wonder! Watch to know how it was brought to life.@2Point0Movie @shankarshanmugh @DharmaMovies @LycaProductions #2Point0FromNov29 pic.twitter.com/NfUfUPb2L1
— Akshay Kumar (@akshaykumar) November 16, 2018
Discussion about this post