காதல் கண் கட்டுதே படம் வாயிலாக கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் அதுல்யா ரவி. கடந்த வருடம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான அந்தப் படத்திற்கு முன்னதாக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பார்த்து சலித்த பழைய கதையாகவே அப்படம் இருப்பதாகவே பெரும்பாலான விமர்சனங்கள் வந்தன. இதனால் அந்தப் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.
விளைவு, கதாநாயகியாக நடித்துவந்த அவர் அதன் பின்னர் கேரக்டரில் ரோல்களிலும்கூட நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில், விஷ்ணு விஷால் நடித்த கதாநாயகன் எனும் படத்தில் கதாநாயகியான கேத்ரின் தெரசாவுக்குத் தோழியாக நடித்த அதுல்யா, ஏமாலியில் நாயகியாக நடித்தார். அதன் பின்னர் வெளியான நாகேஷ் திரையரங்கம் படத்தில் கதாநாயகனான ஆரிக்கு சகோதரியாக நடித்தார். தற்போது நாடோடிகள்-2 வில் சப்போர்ட்டிங் ரோல், சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தில் நாயகி என கைவசம் படங்களை வைத்துள்ள அவர், என் பெயர் ஆனந்தன் எனும் படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை இன்று (நவம்பர் 17) வெளியிட்டுள்ளார் அதுல்யா. அந்த வகையில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, விவேக் எழுதி, சர்கார் படத்தில் வந்திருந்த ஓஎம்ஜி பொண்ணு எனும் பாடலுக்குத்தான் நடனம் ஆடியுள்ளார் அதுல்யா.
கீர்த்தியை இமிடேட் செய்துதான் அதுல்யா நடனமாடியுள்ளார் என்றாலும் தனது நளினமான உடல் அசைவுகளால் மிகவும் நேர்த்தியாகவே நடனமாடியுள்ளதால் இந்த வீடியோ தற்போது வைரல் ஆஃப் தி இன்டெர்நெட்டாக வலம்வருகிறது.
Just a small try 😀#sarkar #omgponnu #dance 😍 pic.twitter.com/tyfx7rVQEq
— Athulyaa Ravi (@AthulyaOfficial) November 17, 2018
Discussion about this post