ஆரண்யகாண்டம் திரைப்படத்திற்குப் பிறகு தியாகராஜா குமார் ராஜா இயக்கி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இதில் விஜய்சேதுபதி, சமந்தா, பக்த்பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடித்து வருகிறார்.
இப்படத்தில் தற்போது ரம்யாகிருஷ்ணன் நடித்துக் கொண்டிருக்கும் வேடத்தில் முன்னர் நதியா நடித்து வந்தார். ஒரு காட்சியில் நதியா மிஷ்கினை அடிப்பது போல் படமாக்கப்பட்டது. காட்சி சரியாக வரவில்லை என்பதால் மீண்டும் மீண்டும் அந்த காட்சி எடுக்கப்பட்டது. ஒருமுறை 2 முறை அல்ல 56 முறை எடுக்கப்பட்டது. நதியாவிடம் 56 முறை மிஷ்கின் அறை வாங்கினார்.
ஒருஅளவுக்கு மேல் பொறுமையை இழந்த மிஷ்கின் “நடிக்க வராதவங்கள எல்லாம் ஏன் நடிக்க கூட்டி வர்றிங்க” என கோபமாக பேசிவிட்டார். இதனால் தான் இந்த படத்திலிருந்து விலகுவதாக கூறி நதியா சென்றுவிட்டார். அதன் பின்னரே அந்த கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடிக்க வந்தார்.
ரம்யா கிருஷ்ணன் இரண்டே அறையில் அந்த காட்சியை ஓ.கே. செய்து விட்டார்.
ஒரு காலத்தில் ராஜிவ் மேனனிடம் அஸிஸ்டென்டாக வேலைபார்த்த குமாரராஜா ஒரு பிரச்சனையின் போது கெட்டவார்த்தையில் திட்டிவிட்டு வெளியேறியதாக ஒரு பேச்சு உள்ளது.
ஒருவேளை மிஷ்கினுக்கு தியாகராஜ குமாரராஜா பாடம் சொல்லிக் கொடுத்திருப்பாரோ???
Discussion about this post