நெல் ஜெயராமனை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாது அவரது மருத்துவச்செலவையும் ஏற்றுள்ளார். நெல் ஜெயராமனை சந்திக்க மருத்துவமனைக்கு வந்த சிவகார்த்திகேயன், ‘நெல்’ ஜெயராமனின் காலைத் தொட்டு வணங்கியிருக்கிறார். ‘நல்லாயிருப்பீங்க. நான் உங்க புள்ள மாதிரி. எதுக்கும் கவலைப்படாதீங்க. ஒரு பிரச்சினையும் இருக்காது. இவ்வளவு நெல் ரகங்களைக் காப்பாற்றியிருக்கும் நீங்கள், ஏதாவது ஒரு நெல் ரகத்துக்கு காப்புரிமை வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்க கோடீஸ்வரன். அனைத்துமே எனக்கு தெரியும். உங்களைப் பற்றி நிறையப் படிச்சிருக்கேன்’ என்று கூறியிருக்கிறார்.
விவசாயி நெல் ஜெயராமனின் சிகிச்சைக்கு முழுப் பொறுப்பேற்ற சிவகார்த்திகேயன், இன்னொரு பேருதவியையும் செய்திருக்கிறார். ஜெயராமன் மகனின் முழு படிப்பு செலவையும் அவர் படிக்கும் காலம் முழுக்க ஏற்பதாக சொல்லி இருக்கிறார். படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் விவசாயம் காக்கும் மனசு மகத்தானது! pic.twitter.com/zRlv0hCeC4
— இரா.சரவணன் (@erasaravanan) November 12, 2018
இதேபோல் ‘நெல்’ ஜெயராமனின் 6ஆம் வகுப்பு படிக்கும் மகனின் முழு படிப்புச் செலவையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். அவனிடம் , என்ன வேண்டுமானாலும் படி, எதற்கு கவலைப்பட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். மேலும், ‘மகனின் படிப்பு செலவை நான் ஏற்றியிருக்கிறேன் என்று ‘நெல்’ ஜெயராமனிடம் சொல்லிடுங்க. ஏனென்றால், இப்போது அவரது மனது, நமக்கு அப்புறம் மகனின் நிலைமை நினைத்து எப்படியும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். இதைச் சொன்னால் அந்த கவலையும் அவருக்கு இருக்காது. அவர் மறுபடியும் பழைய நிலைக்கு வரணும். பார்த்துக்கோங்க” என்று சிவகார்த்திகேயன் அவரோடு இருந்தவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.
Discussion about this post