விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் மிஷ்கினை அறைந்த நதியா திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார். ’ஆரண்ய காண்டம்’ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், ஃபகத் ஃபாசில், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை நதியா நடித்து வந்த நிலையில், சமீபத்தில் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார். நதியாவுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் அந்த கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நதியா இப்படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், மிஷ்கினை அறைவது போன்ற காட்சி 2 நாட்களாக படமாக்கப்பட்டுள்ளது. காட்சி எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதால் நிஜமாகவே தன்னை அறையுங்கள் என மிஷ்கின் கூறியதாகவும், நதியாவும் நிஜமாகவே பளார்விட்டுள்ளார். ஆனால், இயக்குநரின் எதிர்ப்பார்ப்பை நதியாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த காட்சிக்காக நதியா 56 டேக்குகள் எடுத்து, மிஷ்கினை 56 முறை கன்னத்தில் அறைந்துள்ளார்.
அப்போதும் காட்சி சரியாக வராததால், மனம் வெறுத்துப்போன நதியா படத்தில் இருந்து விலகினார். ஆனால் உண்மையில், மிஷ்கின், இனிமேலும் என்னால் அடி வாங்கி நடிக்க முடியாது என்றும், நதியாவை வைத்துக் கொண்டே நடிக்க வராதவர்களை எல்லாம் ஏன் நடிக்க வைக்கிறீங்க? என்றும் கேட்டாதால் கோபித்துக் கொண்ட நதியா படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. நதியாவுக்கு பதிலாக அந்த காட்சியில் நடிக்க ஒப்பந்தமான ரம்யா கிருஷ்ணன் இரண்டே டேக்குகளில் நிஜமாகவே மிஷ்கினை அறைந்து டேக்கை ஓகே செய்து, க்ளாப்ஸையும் வாங்கியுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
Discussion about this post