பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்லும் அளவிற்கு தகுதி இருந்தும், ஐஸ்வர்யாவின் ஆட்டங்களுக்கு ஆதரவளித்ததால், மக்களின் வாக்குகளை குறைவாக பெற்று கடைசியில் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேமரா முன் வந்து நின்று மொக்க ஜோக்குகளை சொல்லி பிக் பாஸ் மற்றும் மக்களை கடுப்பேற்றுவார் யாஷிகா.
https://www.instagram.com/p/BqNUHzClWFK/?utm_source=ig_web_copy_link
யாஷிகாவுக்கு ஆர்மிகள் பல இருந்தாலும், சமீபத்தில் மொக்க ஜோக்ஸ் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் படு மொக்கையாக ஒரு ஜோக்கை சொல்லி தனது ஆர்மியினரையே கடுப்பேற்றியுள்ளார். யாஷிகா பகிர்ந்துள்ள இந்த மொக்க ஜோக் வீடியோவை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் சொன்னதுடன், இது மாதிரி மொக்க ஜோக் சொல்லி சாவடிக்காத என்று கடுமையாக சாடியுள்ளனர்.
Discussion about this post