கஜா புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் நிலையில் தமிழக சினிமா துறையினர் இதுவரை எந்த உதவியும் அறிவிக்காத நிலையில் மக்கள் அவர்கள் மேல் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் இந்நிலையில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் சற்றுமுன்னதாக ரூ.50 லட்சம் நிதி வழங்க முன்வந்துள்ளனர். சற்றுமுன்னர் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் சார்பில் ஐம்பது இலட்சம் நிவாரண உதவி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவித்தொகை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொடுக்கப்படும் என்றும் சிவகுமார் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.
சூர்யா குடும்பத்தின் இந்த உதவிக்கு பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்கு உதவி செய்பவர்களும் பாராட்டு தெரிவித்து வரும் வேளையில் மற்ற முன்னணி நடிகர்கள் எவ்வகையிலும் உதவ முன்வராமலிருப்பது ஏன் என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.
Discussion about this post