தமிழில் வெளியாகும் புதிய படங்கள் இணையதளங்களிலும் உடனே வெளியாகி விடுகின்றன. இதனால் அந்த படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முன் எச்சரிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஏற்பாடு செய்தது. அதையும் மீறி இவ்வாறு செய்கிறார்கள்.
தற்போது ஜோதிகா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ‘காற்றின் மொழி’ படமும் இணையதளத்தில் வெளியாகி விட்டது. வெளியாவதற்கு தடை பெற்று இருந்தனர்.ஆனாலும் திருட்டுத்தனமாக சில மர்ம நபர்கள் இந்த படத்தை வெளியிட்டு விட்டனர். இதனால் படத்தை பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகிறார்கள். இதனால் வசூல் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கும், ஜோதிகா நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பாராட்டுக்களும் குவிந்திருந்த நிலையில் இப்படி ஆகியுள்ளது. படம் நல்ல வசூல் பார்க்கும் என்று படக்குழுவினர் எண்ணினர். ஆனால் தற்போது படம் இணையதளத்தில் வெளியாகி விட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
படக்குழுவினர் சார்பில் தியேட்டர்களில் கேமரா, மொபைல்களில் படம் எடுக்க கூடாது என்றும், சில தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தியிருந்த பொழுதிலும் இவ்வாறு படம் வெளியானது படக்குழுவினருக்கும், ஜோதிகாவிற்கும் பேரதிர்ச்சியானது.
Discussion about this post