பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அப்பா இல்லாத சுஜாவுக்கு அப்பா கிடைத்துள்ளார். அதாவது கமல் ஹாஸனை அப்பா என்றே அழைத்து வருகிறார். மேலும் கமல் ஹாஸன் அப்பா ஸ்தானத்தில் இருந்து திருமண சடங்குகளை செய்து வைப்பேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் கமல்ஹாசன் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களில் இல்லை.
அப்படிப்பட்ட சுஜா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் ஆனால் திருப்பதிக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியானபோது தான் காதல் விவகாரம் பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது.
சிவகுமார், சுஜா வருணியின் நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. அடுத்த படியாக சென்னையில் உள்ள கிரவுன் பிளாசாவில் அவர்களின் திருமணம் இன்று காலை நல்லபடியாக நடந்தது. சுஜா வருணி தன் வாழ்வில் வந்தது தான் செய்த பாக்கியம் என்று சிவகுமார் முன்பு தெரிவித்திருந்தார். மேலும் சுஜா வருணி, சிவகுமார் திருமண நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், நடிகைகள் ராதிகா சரத்குமார், ஸ்ரீ ப்ரியா, சுஹாசினி மணிரத்னம், விஜி சந்திரசேகர், பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.
Discussion about this post