கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1000 கோடி உடனடியாக ஒதுக்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயலால் முழுவதும் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4, 100, முகாம்களில் தங்கி உள்ள குடும்பத்திற்கு பாத்திரம் உட்பட பொருட்கள் வாங்க ரூ.3,800 நிவாரணம் வழங்கப்படும்.
தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,700 வீதம், 175 மரங்கள் நடப்பட்டுள்ள எக்டேருக்கு ரூ.1, 92,500 வழங்கப்படும். சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு 100 சதவீதமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் அளிக்கப்படும்.
முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதி சேதமடைந்தவைகளுக்கு ரூ.3 லட்சம் , மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.5000 , முழுவதும் சேதமான கட்டுமரங்களுக்கு தலா ரூ.42ஆயிரம், பகுதி சேதமடைந்தவைகளுக்கு தலாரூ.20ஆயிரம் வழங்கப்படும். என முதலமைச்சர் தனது அறிக்கையில் அறிவித்துள்ளார்.
Discussion about this post