நாகப்பட்டினம் அருகே கஜா புயல் நிவாரண முகாமில் சமைப்பதற்காக அரிசி என்ற பெயரில் தமிழக அரசு வழங்கியுள்ள பொருள், பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலினால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பெரும் அளவிலான சேதத்தை சந்தித்துள்ளது. 4 நாட்கள் ஆகியும், பல கிராமங்களில் இன்னமும் இயல்பு நிலை திரும்பிய பாடில்லை. ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட தற்போது வரை முழுமையாக சென்றடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://twitter.com/MohanKu05502030/status/1064581291918544896
கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள், அவர்களுக்கு உதவ முடியாத கையறு நிலையில் ஆண்கள் என டெல்டா மக்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே அமைக்கப்பட்டிருந்த கஜா புயல் நிவாரண முகாமில் சமைப்பதற்காக தமிழக அரசு வழங்கியுள்ள அரிசி, புழுத்துப் போய் கட்டிக் கட்டியாய் இருப்பதை பார்த்து முகாமில் தங்கியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‘சோறுடைத்து பசி ஆற்றிய சோழ வளநாடு’ என போற்றப்பட்ட டெல்டா மக்களுக்கு இப்படி ஒரு நிலையா? என நெட்டிசன்கள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Discussion about this post