கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் 2 லாரியில் நிவாரண பொருட்கள் அனுப்பியுள்ளார். கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை மண்ணுக்குள் அமுக்கி சென்ற கஜா புயலினால், மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
#BounceBackDelta My teamvisited to Lenavilaku nd dropped Bread Packets and Napkins and Mosquito Coils and water..
Now heading to Nadiyam Village, Peravurani
And Thopukollai REFUGEE camp …
a small initiative from our side … need more support pic.twitter.com/8ddha2HBpL— G.V.Prakash Kumar (@gvprakash) November 18, 2018
இந்நிலையில், அரசு தரப்பு, தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்களும் சென்ற வண்ணம் இருக்கின்றன. சென்னை வெள்ளம், கேரள வெள்ளத்தையடுத்து, தமிழ் திரையுலகினர் ஒன்றிணைந்து டெல்டா பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும், நிதியுதவியும் அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் முதல் நபராக உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
#வாழ்ந்தாலும் #வீழ்ந்தாலும் தமிழர்கள் என்றும் மென்மக்களே
It was gifted to my team members from the delta farmers .
They always have only love to give
🔥🔥💪🏻💪🏻 #savedelta
It’s time for us to give our best to them pic.twitter.com/vRF2l4DsiW— G.V.Prakash Kumar (@gvprakash) November 19, 2018
கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி உடைமைகளை இழந்த சகோதர, சகோதரிகளுக்காக உதவிக்கரம் நீட்டி அன்பை விதைத்து மனிதநேயம் காப்போம் என ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் 2 லாரிகள் நிறைய நிவாரணப் பொருள் அனுப்பி வைத்ததை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே ஒக்கி புயல் பாதிப்பு சமயத்திலும் கன்னியாகுமரி மக்களுக்கு முதல் ஆளாக களத்தில் இறங்கி நிவாரண பணிகளை ஜி.வி.பிரகாஷ் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post