டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகை ஷ்ரத்தா கபூர், தனது ரசிகர்களின் அன்பிற்கும், பிரார்தனைகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷ்ரத்தா கபூர் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் டெங்குவில் இருந்து மீண்டுள்ள நடிகை ஷ்ரத்தா கபூர், தனது பலமாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், நலம் பெற வேண்டிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
— Shraddha (@ShraddhaKapoor) November 19, 2018
டெங்குவில் இருந்து பூரணமாக குணமடைந்த நடிகை ஷ்ரத்தா கபூர் மீண்டும் ஷூட்டிங் பணிகளை துவக்கியுள்ளார். சமீபத்தில் ராஜ்குமார் ராவ் நடித்த ‘ஸ்ட்ரீ’ படத்தின் மூலம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஷாகித் கபூருடன் ஒரு படமும், சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்று படத்திலும், மற்றொரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். டெங்குவில் இருந்து பூரணமாக குணமடைந்த நடிகை ஷ்ரத்தா கபூர் மீண்டும் ஷூட்டிங் பணிகளை துவக்கியுள்ளார்.
Discussion about this post