ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ படத்தின் பாடல் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இப்படம் கர்நாடக இசையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற 31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.
#SarvamThaalaMayam trk list for u guys … from ThalaivARR @arrahman @DirRajivMenon …. an @arrahman musical … one of the best musical combo after the rocking #minsarakanavu #kandukondeinkandukondein … waiting for this 😍 @Arunrajakamaraj #namuthukumar last song @madhankarky pic.twitter.com/vKQ8YElVCd
— G.V.Prakash Kumar (@gvprakash) November 19, 2018
நீண்ட இசைவெளிக்கு பின் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக பீட்டர் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் வாழ்ந்திருப்பதாக படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பாடல் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் 9 பாடல்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் 6 பாடல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post