ஆந்திராவில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், கித்தலூரைச் சேர்ந்த மோனிகா என்ற இளம்பெண் பணக்கார ஆண்களைச் சந்தித்து, ஆசை வார்த்தைகளை கூறி திருமணம் செய்துகொள்வதும், அவர்களிடமிருந்து பணம் நகைகளைப் பெற்றுக்கொண்டு பின் கருத்து வேறுபாடு எனக்கூறி பிரிந்து மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
அந்த வரிசையில் ஏழாவதாக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டியை என்பவரை திருமணம் செய்த மோனிகா, அவரிடம் பணம், நகைகளை பறிக்க முயன்றுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் காஜிபேட்டை போலீசார் மோனிகாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏற்கெனவே இதேபோல் ஏழு பேரை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, மோனிகாவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மோனிகாவின் தந்தை மற்றும் நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.
Discussion about this post