ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி-20 போட்டி நாளை பிரிஸ்பேன் நகரில் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு இந்திய அணி வீரர்கள் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, இந்திய வீரர்கள் வலைப்பயிற்சி செய்யும் மைதானத்திற்கு வந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான கில்கிறிஸ்ட், கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சாளர்கள் சஹால் மற்றும் பும்ரா ஆகியோருடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்.
That moment at the nets when @Jaspritbumrah93 went Hammer and Tongs 💥💥💥👌🏻 #TeamIndia pic.twitter.com/mWLIlGYHby
— BCCI (@BCCI) November 19, 2018
இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், குருனல் பாண்டியா ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களுடன் வேகப்பந்துவீச்சாளரான பும்ராவும், பேட்டிங் பயிற்சிப் பெற்றார். பந்துவீச்சில் கவனம் செலுத்தாமல், பேட்டிங் பயிற்சியின் போது அவர் எதிர்கொண்ட அனைத்து பந்துகளையும் விளாசி தள்ளினார். கிட்டத்தட்ட அதிரடி பேட்ஸ்மேன் போல ஆடினார். பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பும்ரா, பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post