சோனாலி பிந்த்ரேவை தொடர்ந்து, நடிகை நபீஸா அலிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் படங்களில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுபோல் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த சோனாலி பிந்த்ரேவும் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அவர் தற்போது அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்காக தலை முடியை மொட்டை அடித்த படத்தையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் இந்தி நடிகை நபீஸா அலியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியிகியுள்ளது. இவர் ஹி்ந்தியில் ஜூனூன், மேஜர் சாப், யம்லா பக்லா தீவானா, பிக் பி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அமிதாப்பச்சன், சசிகபூர், தர்மேந்திரா உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
61 வயதாகும் நபீஸா புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
Discussion about this post