சண்டக்கோழி 2 படத்துக்குப் பின் விஷால் நடிக்கும் படம் அயோக்யா. இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸின், உதவியாளரான வெங்கட் மோகன், இயக்குகிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி , லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சேர்ந்து, இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
விக்ரம் வேதா இப்படத்தில் இசைமைப்பாளர் மற்றும் சாம் சி.எஸ். இப்படத்துக்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் விஷால் போலீஸாக நடிக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
டெம்பர் தெலுங்குப் படத்தின் ரீமேக் தான் அயோக்யா. கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி அயோக்யா படத்தின் ஷூட்டிங் துவங்கியது. இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மேலும் வரும் ஜனவரி மாதம் இந்த படம் ரிலீஸாகும் என தெரிகிறது.
Discussion about this post