கனடாவில் இயங்கும் ஒரு தகவல் தொழில்நூட்பம் சார் நிறுவனத்தில், 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அதில், இந்தியர்களே அதிகம். இவர்களில் தமிழர் 60 பேர் பணியாற்றி வருகின்றனர். வெள்ளம் வந்து கேரளா மக்கள் பாதிக்கப்பட்ட போது, அங்கு வேலை செய்த தமிழர்கள் துடித்துப் போய் வெள்ள நிவாரணத்துக்கு பணம் சேர்த்தார்கள். அந்த தமிழர்களை துடியாய் துடிக்கச் செய்ததுக்குப் பின்னால் நாசுக்கான செயற்பாட்டில் இறங்கியது சில மலையாளிகள். ஆளுக்கு 100 டொலர்கள் போட்டு 30,000 கனடிய டொலர் சேர்த்துக் கொடுத்தார்கள். அதவாது, இந்திய ரூபாய் மதிப்பில், 15 லட்சம் ரூபாய்.
அதே நிறுவனத்தில் இன்று ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதே துடியாய் துடித்த தமிழர்கள் தங்கள் தாய் மண்ணாம் தமிழ்நாட்டில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே பாணியில் பணம் சேர்க்க முனைந்திருக்கின்றார்கள். அங்கு வேலை பார்க்கும் அந்த அனைத்து இந்தியர்களும், இந்திய அரசாங்கம் அதைப் பார்த்துக் கொள்ளும், நாங்கள் ஏன் இப்பிரச்சினைக்கு உதவவேண்டும் என கொடுக்க முற்பட்டவர்களையும் தடுத்து நிறுத்தினர் மலையாளிகள்.
இதனை முகநூலில் வெளிப்படுத்தியவர் கனடா தமிழ்த்தாய் மன்ற செயலாளர் திருமுருக வேந்தன்
Discussion about this post