கடந்த 15ஆம் தேதி கேரதாண்டவாடிய கஜா புயலால், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, உணவு, குடிநீர் இன்றி வருகின்றனர். கசியால் கதறும் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். திரைத்துறையினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், யாருக்கும் தெரியாமல் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களின் மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்துள்ளார். இதற்காக, மதுரை, கடலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளின் கணக்குகளில் பணம் செலுத்தி, இந்த உதவிகளை செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகிக்கு 15 லட்சம் ரூபாயை பிரித்து கொடுத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தளபதி விஜய் உத்தரவிட்டிருக்கிறார். விஜய்யின் இந்த நடவடிக்கை முதற்கட்டம் தான் என்றும் விரைவில் அடுத்தக்கட்ட நிவாரணப் பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post