நாம் உணவில் நறுமணம், சுவை ஆகியவற்றிற்காக பூண்டு சேர்த்துக் கொள்கிறோம். இருப்பினும் பூண்டால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பூண்டினை நாம் படுக்கும் தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் நல்ல தூக்கமும் நமக்கு கிடைக்கிறது.
பூண்டின் லேசான உஷ்ணம் மற்றும் மூலிகை நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவித்து, தூக்கமின்மை கோளாறை சரிசெய்ய உதவுகிறது. நல்ல உறக்கம் தருவது மட்டுமின்றி, முடி உதிர்தல் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சனை கோளாறுகளுக்கும் பூண்டு ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.நம் அன்றாட சமையலில் பூண்டினை சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு கிடைக்கிறது.
அது மட்டுமில்லாமல் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. சளித் தொல்லையிலிருந்து பாதுகாப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள் அடைப்புகளை சரிசெய்வதோடு கல்லீரலையும் பாதுகாக்கிறது. உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறி விடும். அதேபோல் புழுக்களும் வெளியேறி விடும்.
Discussion about this post