இந்தியா 1955-ல் சுதந்திரம் அடைந்தது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது புயலை கிளப்பியுள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுக அமைச்சர்களோ, எம்.எல்.ஏக்களோ வாய் திறந்து பேசியதில்லை. ஆனால் தற்போது கூண்டுக்குள் இருந்த கிளிகள் சுதந்திரம் அடைந்தது போல் அமைச்சர்கள் மேடைகளில் பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் பேசும்போது வாயில் வந்ததை ஏதேதோ பேச அவர்கள் சமூக வலைதளவாசிகளின் தீனியாகி வருகிறார்கள்.
இதனை முதலில் ஆரம்பித்து வைத்தது, வைகை அணையில் தெர்மாகோல் மிதக்கவிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ எனலாம். இதனால் அவர் விஞ்ஞானி அமைச்சர் என பெரும்பாலானோரால் அழைக்கப்பட்டு வருகின்றார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் மேடையில் பேசிய அவர் , இந்தியா 1955-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தபோது என பேசியிருப்பது சமூக வலைதளவாசிகளின் தீனியாகி இருக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜூ இப்படி பேசியிருப்பது கஜா புயலைவிட பெரிய புயலை கிளப்பி இருக்கிறது எனவும் சமூக வலைதளவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
Discussion about this post