சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆனாலும் ஒரு முன்னணி கதாநாயகியாக அறியப்பட்டதைவிட இரண்டாவது கதாநாயகியாக விக்ரமுக்கு ஜோடியாக நடித்த பிதாமகன்,சர்ச்சைக்குரிய படமாக அறியப்பட்ட உயிர் மாதிரியான படங்களின் வாயிலாகவே அதிகம் கவனிக்கப்பட்டவர் சங்கீதா.
அவ்வப்போது கேரக்டர் ரோலில் நடித்துவந்தாலும் ரசிகர்களுக்கு அவர் மேல் முன்பு இருந்த கவனமும் தற்போது வெகுவாகக் குறைந்துவருகிறது எனலாம். படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்ட அவர், சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் வந்துகொண்டிருந்தார். அந்த வகையில், ஆர்யா பங்குபெற்ற எங்க வீட்டுப் பிள்ளை எனும் நிகழ்ச்சியை சமீபத்தில் தொகுத்து வழங்கினார் சங்கீதா.அந்நிகழ்ச்சி பிக் பாஸுக்கு போட்டி எனவும்கூட சிலர் கூறிவந்தனர்.
முதல் சீசனில் நல்ல ஃபார்மில் இருந்த பிக் பாஸே இரண்டாவது சீஸனில் காற்று வாங்கியது. இப்படியிருக்க பிக் பாஸுக்கு போட்டியாக இருக்கும் என அறியப்பட்ட எங்கள் வீட்டுப் பிள்ளை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆக, இப்போதைக்கு சங்கீதாவுக்கு ஒரு மிகப் பெரிய கம்பேக் தேவை. இந்நிலையில்தான் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் நடிக்கிறார் சங்கீதா.
அதன்படி தெலங்கானா அரசியல் கதைக்களத்தை கொண்டு உருவாகும் படமான தெலங்கானா தேவுடு எனும் படத்தில் அவர் நடிக்கிறார். ஹரீஷ் வத்யா இயக்கும் இந்தப் படத்தை எம்.ஏ.கே லேப்ஸ் பிரைவேட் லிமிடெடு நிறுவனம் தயாரிக்கிறது. ஸ்ரீகாந்த் பிரதான ரோலில் நடிக்கும் இப்படத்திற்கு நந்தன் ராஜு போப்பிலி இசையமைக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுள்ளதால் இந்தப் படம் அவருக்கு நல்ல கம்பேக் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post