இந்திய சினிமாவின் மைக்கேல்ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று பின்னர் நயன்தாராவுடன் காதல் வயப்பட்டு இருந்தார் பின்னர் இருவரும் பிரிந்தார்கள் இது நாம் அறிந்த விஷயம் சமீபகாலமாக பிரபுதேவா இளம் நடிகை இந்துஜாவுடன் காதல் வயபட்டுள்ளர் என்று செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.
மேயாத மான் படத்தில் வைபவின் தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இந்துஜா. மேயாத மான் படத்தின் ஹீரோயின் ப்ரியா பவானி சங்கரை விட இந்துஜா ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.
மௌன குரு படம் புகழ் இயக்குனர் சாந்தகுமாரின் மகாமுனி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் இந்துஜா. முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் சேர்ந்து மெர்குரி படத்தில் நடித்த போது அவருக்கும், இந்துஜாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து இந்துஜா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் நான் மெர்குரி படத்தில் நடித்தபோது எனக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. அவர் என் காதலர் இல்லை, குரு போன்றவர் என்று கூறியுள்ளார்.
Discussion about this post