சர்கார்’ படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை தொடர்ந்து இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். ‘ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் விவேக் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியான நிலையில் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல், சில தினங்களுக்கு முன் வெளியானது. நயன்தாரா சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
நவம்பர்-18 நயன்தாராவின் பிறந்த நாள். ஏ.ஜி.எஸ்.நிறுவனத்தைச் சேர்ந்த வரும் ‘விஜய்-63’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி அர்ச்சனா, நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கல்பாத்தி அர்ச்சனா, நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்திருப்பதை வைத்து ‘விஜய்-63’ படத்தில் நயன்தாராதான் ஹீரோயினா? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கெனவே விஜய்யுடன் ‘சிவகாசி'(ஒரு பாட்டு), ‘வில்லு’ ஆகிய படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவை தொடர்ந்து ‘விஜய்-63’ படத்தில் அருண் விஜய்யும் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது
Discussion about this post