மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதற்கடுத்தாண்டு மலையாளத்திலேயே ‘காளி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.
பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச் சென்ற சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மீண்டும் மலையாளத்தில் ஃபகத் பாசில் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். விவேக் இயக்கும் இந்தப்படம் ரொமான்டிக், த்ரில்லர் கதையில் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் திரைக்கதையை ‘ஈ மா யூ’ திரைப்படத்தின் திரைக்கதையாசிரியர் பி.எஃப்.மேத்யூஸ் எழுதியுள்ளார்.
சாய் பல்லவி, ஃபகத் பாசிலுடன் அதுல் குல்கார்னி, பிரகாஷ் ராஜ், சுரபி, சுதேவ் நாயர், ரெஞ்சி பஞ்சிகர், லீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விரைவில் தொடங்க இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற இருக்கிறது.
Discussion about this post