பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தனது முன்னாள் காதலரின் நினைவாக போட்டுக் கொண்ட டாட்டூவை நீக்கியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இத்தாலியின் லோக் கோமா பகுதியில் கொங்கனி, சிந்தி முறைப்படி பாரம்பரியத்துடன் தீபிகா-ரன்வீர் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற இவர்களது திருமணம் கடந்த நவ.14, 15 ஆகிய தினங்களில் நடைபெற்றது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு கிடையே தாமதமாக வெளியான இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், இத்தாலியில் திருமணத்தை முடித்த ஸ்டார் ஜோடி மும்பைக்கு திரும்பியது. இதையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பெங்களூரு வந்த ரன்வீர்-தீபிகா தம்பதி விமான நிலையத்தில் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது இத்தனை நாட்களாக தீபிகாவின் பின் கழுத்தில் இருந்து ‘ஆர்.கே’ என்ற டாட்டூ நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ரன்வீர் சிங்கை 6 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தீபிகா, அதற்கு முன்னதாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்தார்.
இவர்களது ஜோடி ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பின்னரே ரன்வீருடன் காதலில் விழுந்து தற்போது தீபிகா அவரை மணந்துக் கொண்டார். இந்நிலையில், ரன்பீர் கபூர் நினைவாக அவரது பெயர் சுருக்கமான ‘ஆர்.கே’ என்ற எழுத்துக்களை தனது பின் கழுத்தில் டாட்டூ போட்டிருந்தார். ரன்வீருடன் காதலில் விழுந்து திருமணம் நிச்சயமாகி, திருமணம் ஆகும் வரை அவரது பின் கழுத்தில் இருந்த ‘ஆர்.கே’ டாட்டூ நீக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
Discussion about this post