‘முத்து’ திரைப்படம் ஜப்பானில் மீண்டும் ரிலீசாகவுள்ளது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு, ரகுவரன், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த ‘முத்து’ திரைப்படம் தமிழகத்தை காட்டிலும் ஜப்பானில் பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. கலாச்சார ரீதியில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய இப்படம் 4கே தரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு, இசையும் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டு ஜப்பானில் மீண்டும் வெளியாகவுள்ளது. டிஜிட்டல் செய்யப்பட்ட ’முத்து’ திரைப்படத்தை வரும் நவ.23ம் தேதி டோக்யோவில் மீண்டும் ரிலீசாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘முத்து’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டது.
ஜப்பானில் மீண்டும் ‘முத்து’ படம் ரீரிலீஸ் ஆவது குறித்து மனம் திறந்த சூப்பர் ஸ்டார்#2point0 #petta #Muthu4K #Muthu #Japan #Japanese #rajinikanth #Rajini #Thalaivar #ARRahman #KSRaviKumar #SuperstarRajinikanth @rajinikanth @meena_actress @rajini_fanclub pic.twitter.com/MjCiWLzziU
— PRABU (@palurprabu) November 21, 2018
இந்நிலையில், ரஜினிகாந்த் இது தொடர்பான புரொமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ’பெரும்பாலான மக்களின் அபிமான படம் ’முத்து’. ஜப்பானிய மக்களுக்கும் இந்தத் திரைப்படம் பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்தை நிறைய ஜப்பானியர்கள் பார்த்திருக்கின்றனர். இன்னும் நிறைய பேர் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். கவிதாலயா நிறுவனம் இப்படத்தை 4கே வெர்ஷனில் அப்கிரேட் செய்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ரகுமானும் பின்னணி இசையெல்லாம் மேம்படுத்தியிருக்கிறார். இந்த டிஜிட்டல் வெர்ஷனை, நீங்கள் அசலைவிட அதிகமாக ரசிப்பீர்கள் என 100% நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
Discussion about this post