கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை மண்ணுக்குள் அமுக்கி சென்ற கஜா புயலினால், மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரசு தரப்பு, தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்களும் சென்ற வண்ணம் இருக்கின்றன.
சென்னை வெள்ளம், கேரள வெள்ளத்தையடுத்து, தமிழ் திரையுலகினர் ஒன்றிணைந்து டெல்டா பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும், நிதியுதவியும் அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சீயான் விக்ரம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கும் நிவாரணமாக ரூ.25 லட்சத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். சீயான் விக்ரமின் ரசிகர்கள் களத்தில் இறங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post