தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 தினங்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவாரூரில் பள்ளிகளுக்கு தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் நிர்மல் ராஜ் அறிவித்துள்ளார்.
மேலும் அம்மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் மற்றும் திருவள்ளூரிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுசேரியிலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தின் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post