அமிதாப் பச்சன், ஆமிர்கான் நடிப்பில் கடந்த நவம்பர் 8ம் தேதி வெளியான படம், தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான். முதல் நாளில் இந்தியாவில் ரூ.50 கோடியை படம் வசூலித்தது. இதனால், பாகுபலி 2 படத்தின் வசூலை இப்படம் முறியடிக்கும் என்று பேசப்பட்டது. ஆனால், 2வது நாளிலேயே பட வசூல் குறைந்தது. தொடர்ந்து இறங்குமுகம் கண்டதால் படம் தோல்வி அடைந்துள்ளது. நாடு முழுவதும் ரூ.120 கோடிக்கு மேல் வினியோகஸ்தர்களுக்கு இப்படம் நஷ்டத்தை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு, தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் நிறுவனத்தை வலியுறுத்தி வருகின்றனர். ‘டியூப்லைட் படமும் இதுபோல் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டத்தை கொடுத்தது. இதையடுத்து, படத்தை தயாரித்த சல்மான் கான் அதற்கான நஷ்டஈடு கொடுத்துவிட்டார். அதுபோல் பெரிய படங்கள் பெரும் தோல்வி அடையும்போது, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் நஷ்டஈடு வழங்குவது வழக்கம். எனவே, யஷ் ராஜ் நிறுவனமும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று, வினியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
Discussion about this post