காதலன் கைவிட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொன்று துண்டு, துண்டாக வெட்டி பிரியாணி சமைத்து கட்டிடத் தொழிலாளர்களுக்கு பரிமாறிய காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். வளைகுடா நாடுகளில் ஒன்று ஐக்கிய அரபு அமீரகம். இங்குள்ள அல் அன் நகரில் ஒரு மொராக்கோ நாட்டு பெண் ,வீட்டு வேலை செய்து வந்துள்ளார். 30 வயதான இவருக்கும், அவருடைய தாய் நாட்டில் இருந்து அல் அன்னுக்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த 25 வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 7 ஆண்டு காலமாக கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். வீட்டுச் செலவு அனைத்தையும் வாலிபரே செய்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் பெண் மீது கொண்டிருந்த காதல் கசந்ததால், அந்த வாலிபர் அவரிடம் இருந்து பிரிய முடிவு செய்துள்ளார். இதனால் அவரிடம், ‘‘சொந்த நாட்டிற்கு சென்று, பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள உள்ளேன்’’ என்று கூறியுள்ளார். இதனால் அந்த பெண் ஆத்திரம் அடைந்துள்ளார். மேலும், காதலன் பிரிந்து போனால் வீட்டு வாடகை, உணவுச் செலவு என எல்லாமே தான் செலவழிக்க வேண்டியிருக்குமே என்று கவலைப்பட ஆரம்பித்தார். இதனால் தனக்கு கிடைக்காத காதலன் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளார்.
இதன் காரணமாக, தன்னை கைவிட்ட காதலனை, சாமர்த்தியமாக பேசி வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அங்கு அவர் வந்த பின்னர் ஆவேசமாக தலையில் தாக்கி உள்ளார். இதில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இத்துடன் ஆத்திரம் தணியாத அந்த பெண், காதலனின் உடலை துண்டுத் துண்டாக வெட்டியுள்ளார். அதைக் கொண்டு அரபு நாட்டு பிரத்யேக அசைவ உணவான, ‘மச்பூஸ்’ பிரியாணியை தயாரித்துள்ளார். அவ்வளவு பிரியாணியையும் சட்டியில் எடுத்துக் கொண்டு, தனது வீட்டுக்கு அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளர்களிடம் கொடுத்து, தனது வீட்டில் சமைத்ததாகவும் அனைவரும் பகிர்ந்து சாப்பிடும்படியும் கூறியுள்ளார். அவர்களும் அதை வாங்கி போட்டிப் போட்டு சாப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே, மூன்று மாதமாக தனது அண்ணனை காணாமல் தவித்துக் கொண்டிருந்த சம்பந்தப்பட்ட வாலிபரின் சகோதரர், இதுகுறித்து விசாரிப்பதற்காக தனது அண்ணனுடன் சேர்ந்து வாழ்ந்த மொராக்கோ பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது அண்ணனைப் பற்றி அவர் கேட்டுள்ளார். ஆனால், அவர் வேறு பெண்ணை அவர் விரும்பி, அவளுடன் சென்று விட்டதாகவும், தன் வீட்டிற்கு வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது பேச்சில் மர்மம் இருப்பது போல் அந்த நபருக்கு தெரிந்துள்ளது.
மேலும், அவரது வீட்டின் வெளிப்புறத்தில் ரத்தக்கறையுடன் ஒரு பல் ஒன்றும் கிடந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த அவர், அதை எடுத்துக் கொண்டு போலீசில் சென்று புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு பெண்ணை கைது செய்து விசாரித்தபோதுதான் அவரது வண்டவாளம் தெரியவந்தது. காதலனை கொன்று சமைத்த பின்னர் மீதமிருந்த எலும்புகள் மற்றும் துண்டுகளை நாய்க்கு போட்டதும் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post