மிகப்பெரிய பொருட்செலவில் உருவான. ஷங்கர் இயக்கியுள்ள ‘எந்திரன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.
இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘2.0’ திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கு தயாராக உள்ளது. இதனுடைய டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களை பிரமிக்க வைத்தது.
இந்திய சினிமாத் துறையினர் பிரமிப்பிற்கு ஆளாக்கும் விதத்தில் ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 305 திரையரங்குகளில் வெளியாவதாகவும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளை சேர்த்தால் 1000க்கும் மேற்பட்ட திரைகளில் இந்தப் படம் திரையிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
Discussion about this post