தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் நிஜ அரசியல்வாதியான பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோர் நடித்த சர்கார் படம், தீபாவளிக்கு வெளியானது. கடும் சர்ச்சைகளிடையே வெளியான இப்படம், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெரம்னி உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கண்டிருக்கிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் விஜய் நடித்த படம் அதிக திரையரங்கில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், சர்கார் படம் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலரை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் இன்னும் சில திரையங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது. முன்னதாக, தெறி, மெர்சல் ஆகிய படங்கள் அமெரிக்காவில் நல்ல வசூலை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post