ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 29-ம் தேதி வெளியாகும் திரைப்படம் ‘2.0’. எந்திரன் படத்தின் கதாபாத்திரங்களான டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி ரோபோ என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ரஜினி. சில கதாபாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஹீரோயினாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கி உள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 3டியில் வெளியாகும் இந்தப் படம், இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்டி ரோபோ கதாபாத்திரத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சிட்டியின் அசாத்தியத் திறமைகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கவரப்பட்டுள்ளனர். எந்திரன் படம் வெளியானபோது, பெரும்பாலான தியேட்டர்களில் சிட்டியின் உருவ பொம்மைகளை வைத்து ரசிகர்களை கவர்ந்தனர். தற்போது 2.0 ரிலீசாக இருப்பதால், மறுபடியும் சிட்டி ரோபோ பிரபலமாக தொடங்கியுள்ளது. இசையமைப்பாளரான அனிருத், தன்னுடைய ஸ்டூடியோவில் சிட்டி ரோபோ ரஜினியின் உருவ பொம்மை ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிருத்.
Discussion about this post