மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில், இந்தியாவின் மேரி கோம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு நடத்தும் இப்போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற 48 கிலோ எடை பிரிவுக்கான அரை இறுதியில், இந்தியாவின் மேரி கோம், தென்கொரியாவின் கிம் யாங் மி- யை எதிர்கொண்டார்.
இதில் மேரி கோம் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டியில் அவர், ஹன்னா ஒகொட்டாவை எதிர்கொள்கிறார். ஏற்கெனவே 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஐந்து ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், இதிலும் வெற்றி பெற்று 6ஆவது முறை பட்டம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Discussion about this post