ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. ஆண்டிகுவாவின் நார்த்சவுண்ட் என்னுமிடத்தில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடின.
முதலில் ஆடிய இந்திய அணி 20வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 18வது ஓவரில் 2விக்கெட் இழப்புக்கு 116ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.
Discussion about this post