61 பேர் உயிரிழந்த பஞ்சாப் ரயில் விபத்துக்கு “மக்களின் அலட்சியமே காரணம்” என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் அக்டோபர் மாதம் தசரா கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்தனர்.
பலர் காயம் அடைந்தனர். அனுமதியின்றி மக்கள் ரயில்வே தண்டவாளத்தில் குவிந்ததும், அவர்களது அலட்சியமுமே இந்த விபத்துக்கு காரணம் என்று ரயில்வே பாதுகாப்பு அமைப்பின் தலைமை ஆணையர் விசாரணையில் வெளிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விழாவின் போது தண்டவாளத்தில் இருந்த கூட்டத்தை போலீசார் கலைக்க முயன்ற போதும், அவர்களுடைய கோரிக்கையை கூட்டத்தில் இருந்தவர்கள் கண்டுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடு தொடர்பாக ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post