இந்தியாவிலேயே பெங்களூரு நகரில் வசிப்பவர்கள்தான் அதிக ஊதியம் பெறுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. லிங்க்டு இன் நடத்திய ஆய்வில், ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க் துறையில் பணியாற்றுபவர்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.14,70,000 ஊதியம் பெறுவது தெரியவந்துள்ளது.
மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை பிரிவில் பணியாற்றுபவர்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.12 லட்சமும், நுகர்வோர் துறையில் பணியாற்றுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சமும் ஊதியமாகப் பெறுகின்றனர். நகரங்களின் அடிப்படையில் பெங்களூருவில் வசிப்பவர்கள் சராசரியாக ஆண்டுக்கு ரூ.11,50,000 ஊதியம் பெறுகின்றனர். இதில் இரண்டாம் இடத்தில் மும்பை இடம்பெற்றுள்ளது. சென்னைவாசிகள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.6,30,000 ஊதியம் பெறுகின்றனர்.
Discussion about this post