ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், காந்தியின் வெண்கல சிலையை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் சென்றார். வியட்நாம் பயணத்தை முடித்துக்கொண்டு, ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், மஹாத்மா காந்தியின் வெண்கல சிலையை, ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார்.
விழாவில், ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசன், இந்திய வம்சாவளியினர் பலர் பங்கேற்றனர்.
Discussion about this post