“பரியேறும் பெருமாள்”விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம், பா.ரஞ்சித் தயாரிப்பில் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம். மேலும் இத்திரைப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்திரைபடத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ், அறிமுக இயக்குனர் ஆவார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் 49வது சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் ‘பரியேறும் பெருமாள்’ படம் திரையிடப்பட்டது.
இத்திரைப்படம் பல்வேறு மாநில பார்வையாளர்கள், சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்து கொள்ளும் விதத்தில் இருந்தது. இத்திரைப்படம் சமூகத்தின் முக்கியப் பிரச்சனையை பேசியுள்ளதாக பாராட்டப்பட்டது. உணர்வுப்பூர்வமான பிரச்சனையை எடுத்துரைத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது.
மேலும் பாராட்டு குவிந்துள்ள நிலையில் இப்படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியில் மூழ்க செய்துள்ளது. இதுகுறித்து நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது..
Discussion about this post