ரஜினகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட படம் பொங்கல் ரேசில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினியின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன், ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. உள்ளிட்ட படங்கள் பொங்களுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டன.
இதில் ரஜினியின் பேட்டயும், அஜித்தின் விஸ்வாசமும் ஒரே நேரத்தில் வெளியாவதால் வசூலில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் 2 படங்களின் வசூலும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 2ல் ஏதாவது ஒன்று ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் ரஜியின் பேட்ட படம் ரேசில்இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.
பேட்ட படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் பலரும் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். மேலும், தயாரிப்பாளர்சங்கமும் பேட்ட படத்தை பொங்கலில் இருந்துவேறு தேதிக்கு மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Discussion about this post