தற்போது கன்னட திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ராஷ்மிகா மந்தனா உருவாகியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு சூப்பர் படத்திற்காக நயன்தாரா வாங்கியதே அதிகபட்ச சம்பளமாக இருந்து வந்தது. அதன் பின் ஏமி ஜாக்சன் தி வில்லன் படத்தில் நடித்ததற்காக பெற்ற சம்பளம் கன்னடி நடிகைகளை வியப்பில் ஆழ்த்தியது. தற்போது ராமிகாவின் மேல் ஒட்டுமோத்த கவனமும் திரும்பியுள்ளது.
2016ம் ஆண்டு வெளியான கிரீக் பார்ட்டி படத்தில் அறிமுகமானார். அதன்பின் நாக சவுரியா உடன் இணைந்து தெலுங்கில் சலோ படத்தில் அறிமுகமானார்.
பின்னர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. தற்போது விஜய் அட்லி கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பொகரு என்ற கன்னட படத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் அவருக்கு 64 லட்சம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே கன்னடப் திரையிலகில் ஒரு நடிகைக்கு கொடுக்கப்பட்ட அதிக சம்பளமாகும்.
Discussion about this post